‘என் பெற்றோர்கூட அதைப் பற்றி கவலைப்படலை' - சொல்கிறார் ரஜினி ஹீரோயின்

‘என் பெற்றோர்கூட அதைப் பற்றி கவலைப்படலை' - சொல்கிறார் ரஜினி ஹீரோயின்

பிரபல இந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர், தமிழில், ரஜினிகாந்தின் ’லிங்கா’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். 35 வயதான சோனாக்‌ஷி, ஜாகிர் இக்பால் என்ற நடிகரைக் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் கையில் மோதிரம் ஒன்றை காண்பித்தபடி புகைப்படம் ஒன்றை சோகாக்‌ஷி வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து அவருக்கு நிச்சயதார்த்தம் முடிவடைந்து விட்டதாகச் செய்திகள் வெளியாயின. இந்நிலையில், தன் பெற்றோரைவிட மக்கள்தான் தனது தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி கவலை கொள்வதாகத் தெரிவித்துள்ளார் சோனாக்‌ஷி.

இதுபற்றி கூறிய அவர், “நான் நடிக்கும் திரைப்படங்கள், நடிப்பு பற்றி வெளிப்படையாகப் பேசுகிறேன். தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசுவதில்லை. ஆனால், ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்கள் என் வாழ்க்கையில் நடப்பதை அறிய விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் விரும்புவதை ஊகித்துக் கொள்கிறார்கள்” என்றார்.

மேலும், “என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள விரும்பாதவரை, அதைச் செய்யமாட்டேன். எதைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமோ, அதை மட்டுமே பகிர்கிறேன். என் திருமணம் மற்றும் கணவர் பற்றி இணையதளங்களில் அதிகமானோர் தேடுவதாகக் கூறுகிறார்கள். என் திருமணம் பற்றி ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் விசாரிக்கும் அளவுக்கு என் பெற்றோர்கள்கூட என்னிடம் கேட்பதில்லை. அவர்களைப் போல என் பெற்றோர் கவலைப்படுவதுமில்லை” என சோனாக்‌ஷி சின்ஹா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in