அஜித்தின் ‘வலிமை’ ரிலீசுக்கு முன்பே ரூ.300 கோடி வசூல்?

அஜித்தின் ‘வலிமை’ ரிலீசுக்கு முன்பே ரூ.300 கோடி வசூல்?

நடிகர் அஜித்தின் 2 வருட கடின உழைப்புக்கு பிறகு உருவாகியுள்ள திரைப்படம் ‘வலிமை’. இதுவரை இல்லாத அளவில், பல ஆக் ஷன் அதிரடிகளுடன் உருவாகியுள்ள இப்படத்துக்கு நீண்ட எதிர்பார்ப்பு உள்ளது. வரும் பிப்ரவரி 24-ம் வெளியாக உள்ள இப்படத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்தப் படம் தமிழைத் தவிர, இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என 4மொழிகளில் வெளியாகவுள்ளது. அதில் தமிழகத்தில் 90 சதவீத திரையரங்கிலும், இந்தியில் 100 சதவீத திரையரங்கிலும், மற்ற மொழிகள் மற்றும் வெளிநாடுகளிலும் இப்படம் அதிக அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சுமார், ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ரிலீசுக்கு முன்னரே ரூ.300 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாம். இன்னும் ரிலீசான பிறகு, பெரிய வருவாயை ஈட்டும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.