பிக் பாஸ் வாய்ப்பு வந்தால் நான் ரெடி: 'எதிர்நீச்சல்' ஜான்சி ராணி பேட்டி!

நடிகை காயத்ரி கிருஷ்ணன்
நடிகை காயத்ரி கிருஷ்ணன்

எல்.ஜி.பி.டி. கம்யூனிடிக்கு தான் மிகப்பெரிய ஆதரவாளர் என ‘எதிர்நீச்சல்’ சீரியல் புகழ் காயத்ரி கிருஷ்ணன் ‘காமதேனு’ யூடியூப் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

'எதிர்நீச்சல்’ சீரியலில் ஜான்சி ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் நடிகை காயத்ரி கிருஷ்ணன். தியேட்டர் ஆர்டிஸ்டான இவர் ‘அயலி’, ‘லேபிள்’ போன்ற வெப்சீரிஸ்களில் நடித்தது மட்டுமல்லாது பல படங்களிலும் நடித்து வருகிறார். தனது திரை அனுபவம், படிப்பு, தான் கடந்து வந்த பாதை என பலவற்றைக் குறித்து 'காமதேனு’ யூடியூப் தளத்திற்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

இதில் அவரிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி மாயா லெஸ்பியன் என்ற விஷயத்தை முன்வைத்து பொதுவெளியில் அதிகம் பகிரப்படும் செய்திகள் குறித்து கேட்டோம்.

அதற்கு அவர் பதிலளித்ததாவது, “நான் எப்போது எல்.ஜி.பி.டி. கம்யூனிட்டிக்கு ஆதரவாளர்தான். எப்படி ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணோடும், ஆணுக்கு பெண்ணோடும் சுதந்திரம் உள்ளதோ அதுபோலதான் பெண்ணுக்கு பெண்ணோடும், ஆணுக்கு ஆணோடும் சுதந்திரம் உள்ளது. இதுமுழுக்க அவர்களின் மனநிலையைப் பொறுத்தது. இதை வைத்து ஒருவரின் கேரக்டரை மதிப்பிடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

சொல்லப்போனால், இதில் எந்தத் தவறும் இல்லை. அவரவரின் இந்த உணர்வுக்கு மதிப்பளித்து, மரியாதையோடு தலையிடாமல் இருப்பதுதான் நல்லது” எனப் பேசியுள்ளார். மேலும் பிக் பாஸ் வாய்ப்பு குறித்துக் கேட்டபோது, வாய்ப்பு வந்தால் நிச்சயம் இறங்கி விளையாடிப் பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in