எதிர்நீச்சல் தொடரில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹரிப்பிரியா, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எதிர்நீச்சல் தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அத்துடன் அந்த தொடரில் வரும் சில கதாபாத்திரங்களும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அந்த வகையில் ஆதி குணசேகரனாக ரசிகர்களை கவர்ந்த மாரிமுத்து அண்மையில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இந்நிலையில், அதே எதிர்நீச்சல் தொடரில் நந்தினி கேரக்டரில் நடித்து வரும் ஹரிப்பிரியா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் நலமுடன் திரும்ப ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.