‘எதற்கும் துணிந்தவன்’ மிரட்டலான டீசர் வெளியானது!

‘எதற்கும் துணிந்தவன்’ மிரட்டலான டீசர் வெளியானது!
எதற்கும் துணிந்தவன் சூர்யா

நடிகர் சூர்யா நடித்துள்ள `எதற்கும் துணிந்தவன்' படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள `எதற்கும் துணிந்தவன்' பட டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டீசரில் அனல் பறக்கும் சண்டை காட்சிகள், டி.இமானின் பின்னணி இசை ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளது. இந்தப் படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, வினய் வில்லனாக நடித்துள்ளார்.

மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வருகிற மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவின் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வரும் மார்ச் 10 ஆம் தேதி ’எதற்கும் துணிந்தவன்’ தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது, டீசரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. “என் கூட இருப்பவன் எப்பையும் பயப்படக் கூடாது... ஏன்னா நம்மள யாரும் ஒன்னும் பண்ண முடியாது” என்று சூர்யா அனல் தெறிக்கவிட்டுள்ளார். இந்த டீசர் சூர்யா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.