`பிரச்சினையை எதிர்கொண்டேன்; நீக்கப்பட்டேன்'- தென்னிந்திய சினிமா மீது பிரபல நடிகை அதிர்ச்சி புகார்!

`பிரச்சினையை எதிர்கொண்டேன்; நீக்கப்பட்டேன்'- தென்னிந்திய சினிமா மீது பிரபல நடிகை அதிர்ச்சி புகார்!

தென்னிந்திய சினிமா பற்றி பிரபல நடிகை அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளார்.

தமிழில், ஐந்து ஐந்து ஐந்து, விரட்டு, விழித்திரு படங்களில் நடித்திருப்பவர் எரிகா பெர்னாண்டஸ். கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், இப்போது இந்தி டிவி தொடர்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் ஒல்லியாக இருந்ததால் தென்னிந்திய சினிமாவில் பல கஷ்டங்களை அனுபவித்ததாகத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: நான் 18 வயதிலேயே, தென்னிந்திய சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். அப்போது மிகவும் ஒல்லியாக இருப்பேன். குண்டாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அதனால் எனக்கு ’பேட்’களை பொருத்தி, அவர்கள் விரும்பும் கேரக்டருக்கு கொண்டு வந்தனர். அப்போது இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டேன். இப்போது அப்படி செய்வேன் என்று நினைக்கவில்லை.

அதேபோல, உடல் எடையை அதிகரித்தும் நீக்கப்பட்டிருக்கிறேன். ஒரு படத்தில் நடிப்பதற்காக, கடுமையாக முயன்று உடல் எடையை கூட்டினேன். ஆனால், ஹீரோவை ஒப்பிடும்போது அவர் என்னைவிட குண்டாக இருந்ததால் அவர் முன் நான் ஒல்லியாகவே இருந்தேன். அதனால் நீக்கப்பட்டேன். ஆனால், தென்னிந்திய சினிமாவில் இன்று அந்த நிலைமை மாறிவிட்டது.

இவ்வாறு எரிகா பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in