எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் இருக்கும் புகைப்படத்தை போட்டு இளையராஜாவுக்கு வாழ்த்து சொன்ன ஈபிஎஸ்!

எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் இருக்கும் புகைப்படத்தை போட்டு இளையராஜாவுக்கு வாழ்த்து சொன்ன ஈபிஎஸ்!

எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் இருக்கும் புகைப்படத்தை போட்டு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும் வாழ்த்து கூறியுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜாவை நியமித்துள்ளது மத்திய அரசு. இதற்கு நடிகர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், "மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன், "ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்" என்று கூறியுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மனமகிழ்ச்சி அளிக்கிறது. இசைஞானி அவர்கள் எனது சொந்த மாவட்டமான தேனியைச் சார்ந்தவர் என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அவருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் இருக்கும் படத்தை போட்டு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "உலக முழுவதும் ரசிகர்களை தனது இசையால் மகிழ்வித்து, இசைஞானி என்று அன்புடன் அழைக்கப்படும் இசைஞானி இளையராஜா அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதை பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதப் பிரதமர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in