
நடிகர் ‘என்னுயிர் தோழன்’ பாபு உயிரிழந்த நிலையில், அவரது தாயாரும் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை வேதனையடைய வைத்துள்ளது.
நடிகர் என்னுயிர் தோழன் பாபு கடந்த மாதத்தில் உடல் நலக்குறைவால் இறந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மகன் இறந்த சில வாரங்களிலேயே அவரது தாயார் பிரேமலதாவும் இறந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘என் உயிர் தோழன்’ பாபு என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அந்தப் படத்திற்குப் பிறகு ’பெரும்புள்ளி’, ’தாயம்மா’, ’பொண்ணுக்குச் சேதி வந்தாச்சு’ ஆகிய படங்களில் நடித்தார். தனது ஐந்தாவது படமாக ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்கிற படம் தான் அவரது மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலே, படுத்த படுக்கையானார். அதன் பின்னான 30 வருஷ போராட்டம். மீண்டும் எழுந்து நிற்போம் என்கிற அத்தனை நம்பிக்கையும், முயற்சியும் வீணாய் போனது. படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது அந்த விபரீதம் நிகழ்ந்தது.
மாடியில் இருந்து கதாநாயகன் குதிக்க வேண்டும். ‘டூப் போட்டுக் கொள்ளலாம்’ என்று படக்குழுவினர் சொல்லியும் அதை மறுத்த பாபு, காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என சொல்லி அவரே கீழே குதித்து இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய பாபு தவறுதலாக வேறு இடத்தில் விழுந்ததில் அவருடைய முதுகுப் பகுதியில் பலத்த அடிபட்டு எலும்புகள் உடைந்து நொறுங்கியது. முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்தும் அது முழுதாக பலனளிக்கவில்லை.
இருபது வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்த பாபுவை அவரது வயதான தாயார்தான் அருகில் இருந்து கவனித்து வந்தார். பாபுவின் அம்மா பிரேமா மறைந்த முன்னாள் சபாநாயகர் க.ராஜாராமின் சகோதரி. பாபுவின் இறப்புக்குப் பிறகு ரொம்பவே மனம் உடைந்த நிலையிலிருந்த அவர் சரியாகச் சாப்பிடாமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. மகன் இறந்த துக்கத்துடன் முதுமை காரணமாகவும், அவரது உடல்நிலை ரொம்பவே பாதிக்கப்பட்டு இன்று அவர் காலமாகிவிட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!
மகனுக்கா... மருமகளுக்கா? சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!
காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!
“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!