`எஞ்சாய் எஞ்சாமி’ சர்ச்சை: அறிவின் விளக்கமும் சந்தோஷ் நாராயணன் பதிலும்!

`எஞ்சாய் எஞ்சாமி’ சர்ச்சை: அறிவின் விளக்கமும் சந்தோஷ் நாராயணன் பதிலும்!

அறிவின் இந்த பதிவுக்கு பிறகு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்து தெளிவுப்படுத்தியுள்ளார்.

‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடலுக்காக தொடர்ந்து தான் புறக்கணிக்கப்படுவதாக எழுந்த சர்ச்சைகளுக்கு பாடகர் அறிவு, அந்த பாடல் தன்னுடையது என விளக்கம் அளித்திருந்தார். அறிவின் இந்த பதிவுக்கு பிறகு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்து தெளிவுப்படுத்தியுள்ளார். ‘கடந்த டிசம்பர், 2020-ல் தீ நம் கலாச்சாரத்தின் பெருமையையும் இயற்கையையும் கொண்டாடும் விதமாக ஒரு தமிழ் பாடல் அமைக்க வேண்டும் என்ற ஐடியாவை கூறினார். பிறகு நான் அதை கம்போஸ், அரேஞ் மற்றும் புரோகராம் மற்றும் பதிவு செய்து பாடவும் செய்தேன். என்னுடைய இந்த வேலைக்காக இந்த பாடலின் தயாரிப்பாளர் என கிரெடிட் கொடுக்கப்பட்டுள்ளது.

தீயும் அறிவும் இந்த பாடலை பாட ஒத்து கொண்ட பின்பு இந்த பாடலை எப்படி வித்தியாசமாக கொண்டு வர வேண்டும் என்பதையும் இருவரும் பேசினார்கள். அவருடைய வரிகளுக்கு தீயும் கம்போஸ் செய்தார். இயக்குநர் ‘காக்காமுட்டை’ மணிகண்டனுக்கும் எங்களுடைய நன்றி. அவர்தான் அறிவுடன் இருந்து வரிகளை உன்னிப்பாக கவனித்து தன்னுடைய அனுபவத்தில் இருந்து நிறைய உண்மை கதைகள் மற்றும் வரலாற்று உண்மைகளை சொல்லி சிறந்த வரிகளை தேர்ந்தெடுத்து கொடுத்தார். அவருடைய ‘கடைசி விவசாயி’ படத்தின் கதை தான் ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் உருவாக முன்மாதிரியாக இருந்தது. இதில் இடம் பெற்றுள்ள ஒப்பாரி பாடல்கள் அரக்கோணத்தில் இருந்து வந்த தாத்தா, பாட்டிகள் பாடினார்கள். அவர்களின் வேலையை வெளி கொண்டு வந்த அறிவுக்கு பாராட்டுகள். ‘பந்தலுல பாவக்கா’ ஒப்பாரி எப்போதுமே எனக்கு பிடித்த ஒன்று.

இந்த பாடலுக்கான ஐடியா, கம்போசிசன், பதிவு என அனைத்தும் 30 மணி நேரத்திற்குள் நடந்து முடிந்த ஒன்று. இந்த பாடலுக்கான வருவாய் மற்றும் சொந்தம் எனக்கு, தீ மற்றும் அறிவு என மூன்று பேருக்குமே உண்டு. என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள தளங்களில் இந்த பாடல் இடம் பெறும் போது அறிவு, தீக்கு பாடலுக்கு உரிய மதிப்பீடு கொடுப்பேன். ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் இசை வெளியீட்டிலேயே அறிவு பற்றி நான் பேசியிருப்பதே இதற்கு சாட்சி.

செஸ் ஒலிம்பியாட் 2022-ன் தொடக்க விழாவில் ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடலை தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாள் பாடி இருக்கிறார்கள். அறிவு அங்கு இல்லாததை நாங்கள் மிஸ் செய்தோம். அந்த சமயத்தில் அவர் அமெரிக்காவில் இருந்ததால் அவரால் இதில் பங்கேற்க முடியவில்லை.

என்னுடைய இலக்கு கலை மூலம் நிறைய மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பது தான். ‘வாங்கோ வாங்கோ ஒன்னாகி’’ என அந்த கடிதத்தை முடித்து இருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in