தனுஷ் ஜோடியாக ஸ்வீடன் நடிகை

எல்லி அவ்ரம்
எல்லி அவ்ரம்

’நானே வருவேன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக ஸ்வீடன் நடிகை எல்லி அவ்ரம் நடிக்க இருக்கிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம், `நானே வருவேன்'. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். தனுஷ் இரண்டு வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்னொரு கதாநாயகியாக சுவீடன் நடிகை எல்லி அவ்ரம் (Elli AvrRam) நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

எல்லி அவ்ரம்
எல்லி அவ்ரம்

ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், இந்தியில், மிக்கி வைரஸ், உங்லி, நாம் ஷபானா, மலாங் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ள இவர், சில வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழில், இந்தி குயின் ரீமேக்கான ’பாரிஸ் பாரிஸ்’ படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

’நானே வருவேன்’ போஸ்டரை இவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளதால், இந்தப் படத்தில் அவர் நடிப்பது உறுதி ஆகியிருக்கிறது என்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in