‘ஆமாம், தனுஷுடன் நடிக்கிறேன்!’
எல்லி அவ்ரம்

‘ஆமாம், தனுஷுடன் நடிக்கிறேன்!’

உறுதிப்படுத்திய ஸ்வீடன் நடிகை

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம், `நானே வருவேன்'. இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்னொரு கதாநாயகியாக ஸ்வீடன் நடிகை எல்லி அவ்ரம் (Elli AvrRam) நடிக்கிறார் என்கிற தகவல் வெளியானது.

செல்வராகவன், எல்லி அவ்ரம், தனுஷ், ஓம்பிரகாஷ்
செல்வராகவன், எல்லி அவ்ரம், தனுஷ், ஓம்பிரகாஷ்

இவர், இந்தியில், ‘மிக்கி வைரஸ்’, ‘உங்லி’, ‘நாம் ஷபானா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ள இவர், சில வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழில், இந்தி ’குயின்’ ரீமேக்கான ’பாரிஸ் பாரிஸ்’ படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் நடிகை எல்லி அவ்ரம், தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனுஷ், செல்வராகவன், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கீதாஞ்சலியுடன் எல்லி அவ்ரம்
கீதாஞ்சலியுடன் எல்லி அவ்ரம்

அதில், ‘நான் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்துள்ள காட்சிகளின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. இதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அற்புதமான நடிகர் தனுஷ், புத்திசாலித்தமான இயக்குநர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஆகியோருடன் பணியாற்றியது சிறப்பாக இருந்தது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.