இயக்குநர்கள் சங்க தலைவர் பதவிக்கு ஆதரவு திரட்டும் கே.பாக்யராஜ்!

ஜனவரி 23-ல் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தீவிரம்
இயக்குநர்கள் சங்க தலைவர் பதவிக்கு ஆதரவு திரட்டும் கே.பாக்யராஜ்!
கே.பாக்யராஜ்

தற்போதைய தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் நிறைவடைவதை முன்னிட்டு, புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பாகி உள்ளது. டிசம்பரில் நடைபெற்ற சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் இதற்கான முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி தலா ஒரு தலைவர், பொதுச் செயலாளார், பொருளாளர் ஆகியோருடன், துணைத் தலைவர்கள்(2), இணைச் செயலாளர்கள்(4), செயற்குழு உறுப்பினர்கள்(12) ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. சங்க அலுவலகத்தில் வழங்கப்பட்டு வரும் விண்ணப்பங்களைப் பெற, இன்று (ஜன.6) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்து வரும் 3 தினங்களில் சமர்பிக்கலாம். அதற்கான கடைசி நாள் ஜன.9. விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி ஜன.10 அன்று நடைபெற உள்ளது. இறுதி செய்யபட்ட வேட்பாளர் பட்டியலை ஜன.12 அன்று வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கான தேர்தல் ஜன.23, ஞாயிறு அன்று சென்னை வடபழனி இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பை விட, சங்கத்தின் தலைவர் பதவிக்கு யார் வருவார் என்ற கணிப்புகளே அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கின்றன.

அந்த வகையில் இயக்குநர் கே.பாக்யராஜ், சக இயக்குநர்கள் மத்தியில் ஆதரவு சேகரித்து வருவதாகத் தெரிகிறது. இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக ஃபோட்டோ ஷூட், விளம்பரப் படங்கள், குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் என அடுத்த சுற்றுக்குத் தயாராகி வரும் கே.பாக்யராஜ், இயக்குநர் சங்க தேர்தலிலும் ஒரு கை பார்க்க இருக்கிறார்.

Related Stories

No stories found.