ஷ்ரத்தா முதல் ரன்பீர் வரை... அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் சிக்கும் பாலிவுட் பிரபலங்கள்!

ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூர்
ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூர்

ஷ்ரத்தா கபூர், ஹூமா குரேஷி, ஹினா கான், ரன்பீர் கபூர் என ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளனர். சூதாட்ட செயலி ஒன்றை விளம்பரப்படுத்தியது தொடர்பான நிதிபரிவர்த்தனைகள் குறித்து, இந்த பாலிவுட் நட்சத்திரங்களிடம் அமலாக்கத்துறை தொடர் விசாரணை மேற்கொள்கிறது.

மஹாதேவ் என்ற பெயரிலான சூதாட்ட செயலியின் பணபரிவர்த்தனைகளில் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து அமலாக்கத்துறை தனது விசாரணையை தொடங்கியது. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஹவாலா மோசடியில் பணப்பரிமாற்றம் நடைபெறுவதற்கு, இந்த சூதாட்ட செயலி மேடையாக பயன்படுத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கபில் சர்மா முதல் ஹூமா குரேசி வரை
கபில் சர்மா முதல் ஹூமா குரேசி வரை

இதனையடுத்து மஹாதேவ் சூதாட்ட செயலியின் அனைத்து நிதிபரிவர்த்தனைகளையும் அமலாக்கத்துறை விசாரிக்கத் தொடங்கியுள்ளது. சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்ததற்காக ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர், ஹூமா குரேசி, ஹினா கபூர், கபில் சர்மா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

அதன்படி அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகி, தங்களுக்கான நிதிபரிவர்த்தனையின் மூலம் உள்ளிட்ட விவரங்களை, அதற்கான ஆவணங்களுடன் இவர்கள் சமர்பித்தாக வேண்டும். அமலாக்கத்துறை சம்மனுக்கு இணங்கி பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர், இன்று அதன் விசாரணைகளுக்கு ஆஜராகிறார். ரன்பீர் கபூர் தரப்பில், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக 2 வார அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

ரன்பீர் கபூர்
ரன்பீர் கபூர்

இந்த நட்சத்திரங்கள் மட்டுமன்றி, மேலும் சில பாலிவுட் பிரபலங்கள் மற்றும் சோஷியல் மீடியா செல்வாக்கிலான பிரபலங்கள் என சுமார் 100க்கும் மேலானவர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது. மஹாதேவ் சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்தது மட்டுமன்றி, வளைகுடா நாடுகளில் நடைபெற்ற அதன் நிகழ்வுகள், நிறுவனத்தின் சிஇஓ சௌரப் சந்திரகரின் திருமண விழா கலை நிகழ்ச்சிகள், நிறுவனத்தின் வெற்றி விழாக்கள் ஆகியவற்றில் பங்கேற்றது தொடர்பாகவும் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது.

இதையும் வாசிக்கலாமே...

மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!

ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!

அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!

சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in