துல்கர், ராஷ்மிகாவின் `சீதா ராமம்’: புது அப்டேட்!

துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர்
துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர்

துல்கர் சல்மான் நடிக்கும் ’சீதா ராமம்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் துல்கர் சல்மான், ராணுவ அதிகாரியாக நடிக்கும் படம், ’சீதா ராமம்’. இதில் அவர் ராம் என்ற கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்குகிறார். ஸ்வப்ன சினிமா என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மிருணாள் தாக்கூர் நாயகியாக நடிக்கிறார்.

மற்றொரு நாயகியாக, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அவர், காஷ்மீரைச் சேர்ந்த பெண்ணாக அஃப்ரீன் என்ற கேரக்டரில் நடிக்கிறார். அவர் பிறந்த நாளை முன்னிட்டு, ராஷ்மிகாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. பின்னர் வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் வரவேற்பைப் பெற்றது.

பான் இந்தியா படமாக இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in