’ஹே சினாமிகா’ படத்திற்காக துல்கர் பாடிய ராப் வெளியானது

பிப்ரவரியில் படம் ரிலீஸ்
’ஹே சினாமிகா’ படத்திற்காக துல்கர் பாடிய ராப் வெளியானது

’ஹே சினாமிகா’ படத்தில் துல்கர் சல்மான் பாடியுள்ள ’அச்சமில்லை’ என்ற ராப் பாடல் இன்று வெளியாகியுள்ளது.

பிரபல நடன இயக்குநர் பிருந்தா, திரைப்பட இயக்குநராக அறிமுகமாகும் படம், ’ஹே சினாமிகா’. இதில், துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். அதிதி ராவ் ஹைதாரி, காஜல் அகர்வால், ஷியாம் பிரசாத் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு, விஜய் சேதுபதியின் ’96’ இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்கிறார்.

துல்கர் சல்மானுடன் நடன இயக்குநர் பிருந்தா
துல்கர் சல்மானுடன் நடன இயக்குநர் பிருந்தா

துல்கர் சல்மானின் 33-வது படமான இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. யாழன் எனும் கேரக்டரில் நடிக்கும் துல்கர் சல்மான், படத்தில் ஆர்ஜேவாக வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்காக, தமிழில் முதன்முறையாக ’அச்சமில்லை அச்சமில்லை’ என்ற ராப் பாடலை துல்கர் பாடியுள்ளார். 45 நிமிடங்களிலேயே பதிவு செய்யப்பட்ட இந்தப் பாடல் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்டது. மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப் பாடல், வெளியான சிறிது நேரத்திலேயே வரவேற்பைப் பெற்றுள்ளது.

’ஹே சினாமிகா’ படம், அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in