பான்- இந்தியா என்ற வார்த்தை எரிச்சல் தருகிறது: துல்கர் சல்மான்

பான்- இந்தியா என்ற வார்த்தை எரிச்சல் தருகிறது: துல்கர் சல்மான்

‘பாகுபலி’ வரிசை படங்களுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் வெளியிடுவது போல திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. இதற்கு, பான் இந்தியா என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது ’புஷ்பா’ படத்தை அடுத்து ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் பான்- இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், பான்- இந்தியா என்ற வார்த்தையே எரிச்சலாக இருக்கிறது என்று நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த வார்த்தையைக் கேட்பது பிடிக்கவில்லை. சினிமாவில் திறமைகள் பரிமாற்றம் நடப்பதை விரும்புகிறேன். அது ஆரோக்கியமான விஷயம். ஆனால், இது ஒரே நாடுதானே? பிறகு ஏன் பான் இந்தியா? இந்த வார்த்தையை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று புரியவில்லை. பான் அமெரிக்கா என்று யாராவது சொல்கிறார்களா? பான் இந்தியாவுக்காகவே ஒரு படத்தை உருவாக்க முடியாது.

அப்படி வெளியான படங்கள், ஒரு மொழியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டவைதான். இந்தியா முழுமைக்குமான படம் என்று வெவ்வேறு மொழிகளில் இருந்து பரிச்சயமான நடிகர்களை நடிக்க வைக்கலாம். அந்த மார்க்கெட்டை பிடிப்பதற்காக, அப்படி பண்ணலாம். ஆனால், அதற்காக அந்தக் கதையின் உணர்வுகளையோ, கலாசாரத்தையோ இழந்துவிட கூடாது என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in