இத்தனை நடிகர்களுக்கு டப்பிங் பேசிய மகத்தான கலைஞன் மரணம்

தெலுங்கு டப்பிங் கலைஞர் ஸ்ரீநிவாசமூர்த்தி மரணம்.
தெலுங்கு டப்பிங் கலைஞர் ஸ்ரீநிவாசமூர்த்தி மரணம்.இத்தனை கலைஞர்களுக்கு டப்பிங் பேசிய மகத்தான கலைஞன் மரணம்

ஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் பேசிய பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீநிவாசமூர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

டப்பிங் கலைஞர் ஸ்ரீநிவாசமூர்த்தி
டப்பிங் கலைஞர் ஸ்ரீநிவாசமூர்த்திஇத்தனை கலைஞர்களுக்கு டப்பிங் பேசிய மகத்தான கலைஞன் மரணம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி டப்பிங் கலைஞர்களில் ஒருவர் ஸ்ரீநிவாசமூர்த்தி. தமிழில் இருந்து தெலுங்கில் டப்பிங் செய்யப்படும் படங்களுக்கு குரல் கொடுத்ததன் மூலம் பிரபலமானவர். தமிழ் நடிகர்களான அஜித், விக்ரம், சூர்யா உள்பட பிரபல நட்சத்திரங்களின் தெலுங்கு டப் படங்களில் இவர் தான் குரல் கொடுத்துள்ளார்.

குறிப்பாக 'சிங்கம்' திரைப்படத்தில் சூர்யாவின் கேரக்டருக்கு தெலுங்கில் டப்பிங் பேசி பிரபலமானவர் ஸ்ரீநிவாசமூர்த்தி. 'விஸ்வாசம்' படத்தில் அஜித் மற்றும் மோகன்லால், அர்ஜுன், உபேந்திரா உள்பட பலரின் படங்களுக்கும் டப்பிங் கொடுத்துள்ளார்.

மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் ஆகியோருக்கு அவர்களின் தெலுங்கு டப்பிங் படங்களுக்கும் இவர் தான் குரல் உபயம் தந்துள்ளார். நடிகர் மாதவனின் 'ராக்கெட்ரி' படத்தின் தெலுங்கில் ஸ்ரீநிவாசமூர்த்தி தான் டப்பிங் பேசியிருந்தார். 1990-ம் ஆண்டு டப்பிங் கலைஞராக பயணத்தைத் தொடங்கிய ஸ்ரீநிவாசமூர்த்தி, 1998-ம் ஆண்டு வெளியான 'சிவய்யா' படத்திற்காக ஆந்திரா அரசின் நந்தி விருதைப் பெற்றுள்ளார். ஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் பேசி சாதனைப்படைத்த ஸ்ரீநிவாசமூர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவரது உடலுக்குத் திரைத்துறையினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in