
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்3’ திரைப்படம் வெற்றிப் பெற்றது. இதன் அடுத்த பாகமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மலையாளம் மட்டுமல்லாது தமிழ், இந்தியிலும் இந்தப் படம் வெளியானது. தமிழில் கமல்ஹாசனும், இந்தியில் அஜய்தேவ்கனும் நடித்திருந்தனர். இரண்டு பாகங்களுக்குப் பிறகு மூன்றாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கான பணியில் இயக்குநர் ஜீத்து ஜோசப் தற்போது ஈடுபட்டுள்ளார்.
‘த்ரிஷ்யம் 3’ இதன் கடைசி பாகமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மொழியிலும் படம் ஒரே சமயத்தில் வெளியாகமல், வெவ்வேறு காலக்கட்டங்களில் வெளியானது. மேலும், ஓடிடி போன்றவற்றின் வளர்ச்சிக்குப் பிறகு ரசிகர்கள் கதையை தேடித் தெரிந்து கொள்வது என்பத் சுலபமான ஒரு காரியமாகவும் இருக்கிறது. இதனால், மலையாளத்தில் வெளியான பின்பு இந்தியில் ரீமேக் செய்யப்படும்போது அதன் வசூல் பாதிக்கப்படும் என்பதால், மலையாளம், இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியிடுவது சிறந்த முடிவாக இருக்கும் என நடிகர் அஜய் தேவ்கன் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்தான, அறிவிப்பு படக்குழு தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.