‘தி கிளாசிக் கிரிமினல் இஸ் பேக்’ - வருகிறது மோகன்லால் படத்தின் 3-ம் பாகம்!

‘தி கிளாசிக் கிரிமினல் இஸ் பேக்’ - வருகிறது மோகன்லால் படத்தின் 3-ம் பாகம்!

மோகன்லால், மீனா நடிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கிய படம், ’த்ரிஷ்யம்’. 2015-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம், தமிழ், கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு தொடர் வெற்றிகளைப் பெற்றது.

இதன் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பும் பரபரப்பும் இந்தப் படத்திலும் இருந்ததால், இந்தப் படமும் வெற்றி பெற்றது.

மோகன்லால், அந்தோணி பெரும்பாவூர்
மோகன்லால், அந்தோணி பெரும்பாவூர்

இந்நிலையில் இதன் மூன்றாம் பாகம் உருவாக இருப்பதாக, கடந்த சில வாரங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ’த்ரிஷ்யம் 3’ படத்தின் பணிகள் தொடங்குவதை தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் உறுதிப்படுத்தியுள்ளார். கேரளாவில் நடந்த விருது விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இதைத் தெரிவித்தார்.

இதையடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில், ’கிளாசிக் கிரிமினல் இஸ் பேக்’ என்று கூறி ’த்ரிஷ்யம் 3’ ஹேஷ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in