ரெட் ஜெயண்ட் மூவிஸில் அதிரடி மாற்றம்: உதயநிதி ஸ்டாலின் பெயர் நீக்கம்

ரெட் ஜெயண்ட் மூவிஸில் அதிரடி மாற்றம்: உதயநிதி ஸ்டாலின் பெயர் நீக்கம்

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவன லோகோ வெளியிடும் போது இடம் பெறும் உதயநிதி ஸ்டாலின் பெயர் திடீரென அகற்றப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியான 'குருவி' திரைப்படத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக அறிமுகமானார். இப்படத்தை இவரது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்தது. இதையடுத்து 'ஆதவன்', 'மன்மதன் அம்பு' உள்பட பல்வேறு படங்களை இந்நிறுவனம் தயாரித்தது.

இந்த நிலையில், 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து 'மனிதன்', 'சைக்கோ' உள்பட பல படங்களில் அவர் கதாநாயகனாக நடித்தார். சேப்பக்கம் சட்டப்பேரவை உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின், அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனால் 'மாமன்னன்' தான் தனது இறுதிப்படம் என்றும் உதயநிதி அறிவித்திருந்தார். ஆயினும் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் தொடர்ந்து படங்களை தயாரிக்கவும், விநியோகம் செய்வேன் என்றும் அவர் கூறி இருந்தார்.

இந்நிலையில், தற்போது அந்த ரெட் ஜெயண்ட்டிலும் அதிரடி மாற்றம் நடந்துள்ளது. இதுவரை ரெட் ஜெயண்ட் லோகோ திரையிடப்படும்போது உதயநிதி ஸ்டாலின் வழங்கும் என பெயர் வெளியாகும். ஆனால் தற்போது, அதிலிருந்து உதயநிதியின் பெயரை தூக்கிவிட்டு ரெட் ஜெயண்ட் மூவீஸ் வழங்கும் என்று குறிப்பிடுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இதன்மூலம் இனி ரெட் ஜெயண்ட் வெளியிட உள்ள 'செம்பி', 'துணிவு', 'வாரிசு', 'விடுதலை', 'பொன்னியின் செல்வன் 2' போன்ற படங்களில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வழங்கும் என்பது தான் லோகோவில் இடம்பெற்று இருக்கும் என தெரியவந்துள்ளது. உதயநிதி அமைச்சராகியுள்ளதால் அவரது பெயர் ரெட் ஜெயண்ட் மூவீஸில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in