வரதட்சணை: இயக்குநர் விக்னேஷ் சிவன் போட்ட `நச்' பதிவு

வரதட்சணை: இயக்குநர் விக்னேஷ் சிவன் போட்ட `நச்' பதிவு

வரதட்சணை குறித்து, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஷேர் செய்த பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

வரதட்சணை என்பதன் மூலம், தமிழகத்தில் உள்ள பல குடும்பங்கள் தத்தளித்து வறுமையில் இருப்பதை நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில், இதற்கு பதிலடி கொடுக்கும் கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

அதாவது, வரதட்சணை கொடுப்பதால் உள்ள நன்மைகள் பற்றி, கல்லூரி ஒன்றின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், "அடேங்கப்பா, க்ளாப்ஸ் க்ளாப்ஸ்" என குறிப்பிட்டு, மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளதோடு, பகிர்ந்துள்ள புகைப்படத்தில், வரதட்சணை வாங்குவதால், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, அதிக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்ற பயத்தில் பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் படிக்க வைப்பதாகவும், அப்படி படித்து வேலைக்கு செல்லும் பட்சத்தில், அவர்களுக்கு டிமாண்ட் செய்யப்படும் வரதட்சணை குறைவாக இருக்கும் என்பதால், பெண்களின் கல்வி மேம்படவும் வழி வகுக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும்விட, கடைசி பாயிண்ட்டில், அதிக வரதட்சணை கொடுத்தால், அழகாக இல்லாத பெண்ணுக்குகூட சிறந்த வரன் அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி, தன்னுடைய எதிர்ப்பை பொது வெளியில் சொன்ன விக்னேஷ் சிவனை பாராட்டியும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.