`படத்திற்கான அப்டேட் கேட்டு ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க'- ரசிகர்களுக்கு சிலம்பரசன் அட்வைஸ்

`படத்திற்கான அப்டேட் கேட்டு ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க'- ரசிகர்களுக்கு சிலம்பரசன் அட்வைஸ்

``படத்திற்கான அப்டேட் கேட்டு ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க" என்று ரசிகர்களுக்கு நடிகர் சிலம்பரசன் அட்வைஸ் செய்துள்ளார்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. ஜெயமோகன் எழுதிய கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவானது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மூலம் ஐசரி கணேஷ் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் வசூல் ரீதியிலும் வெற்றிபெற்றதால் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகிழ்ச்சி அடைந்தார். அண்மையில் இதன் படத்தின் வெற்றிக்கொண்டாட்டத்தின் போது நடிகர் சிம்புவுக்கு உயர்ந்த ரக 'டொயோட்டா வெல்ஃபையர்' சொகுசு காரினை தயாரிப்பாளர் பரிசாக வழங்கினார். அதேபோல இயக்குநர் கௌதம் மேனனுக்கு ராயல் என்பீல்டு புல்லட்டை பரிசாக வழங்கினார்.

இந்த நிலையில் படத்தின் 50-வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் சிம்பு, ``ரசிகர்கள் எல்லோரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். எல்லா ரசிகர்களும் ஹீரோவை தூக்கி மேலே வைப்பாங்க. ஆனா நான் என் ரசிகர்களை தூக்கி மேலே வைத்திருக்கிறவன். என் படத்துக்கு மட்டுமல்ல எல்லோருடைய படத்திற்கான அப்டேட்டும் கேட்டு ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க" என்று அட்வைஸ் பண்ணினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in