`அதிதி ஷங்கரை விமர்சிக்காதீங்க'‍- `விருமன்' பாடல் சர்ச்சை குறித்து செந்தில் ராஜலட்சுமி விளக்கம்

`அதிதி ஷங்கரை விமர்சிக்காதீங்க'‍- `விருமன்' பாடல் சர்ச்சை குறித்து செந்தில் ராஜலட்சுமி விளக்கம்

`விருமன்' பாடல் சர்ச்சை குறித்து செந்தில் ராஜலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் `விருமன்'. படத்தில் நாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மதுரையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. முதல் படத்திலேயே யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து அதிதி ஷங்கர் மதுரை வீரன் என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடலை முதலில் பாடியது சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலட்சுமியாம். திடீரென ராஜலட்சுமியை நீக்கிவிட்டு அதிதி ஷங்கரை பாட வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.

இந்த சர்ச்சைக்கு செந்தில் ராஜலட்சுமி தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், "விருமன் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து நான் பாடிய மதுரை வீரன் பாடலில் எனது குரலுக்கு பதிலாக அதிதி ஷங்கரின் குரல் இடம் பெற்றதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சினிமாவில் இதுபோன்று நடப்பது சகஜமான ஒரு விஷயம்தான். ஒரு பாடலுக்கு யாருடைய குரல் பொருத்தமாக இருக்கிறதோ அவர்களைத்தான் இசையமைப்பாளர்கள் பாட வைப்பார்கள்.

அப்படி மதுரை வீரன் பாடலை முதலில் என்னை பாட வைத்த யுவன் சங்கர் ராஜா, எனது குரலைவிட அதிதி சங்கரின் குரல் சிறப்பாக இருந்ததால் மீண்டும் அவரை வைத்து அந்தப் பாடலை பாட வைத்து இருக்கிறார். அவரும் நன்றாகத்தான் பாடி இருக்கிறார். அதனால் இதற்காக அதிதி ஷங்கரை பலரும் விமர்சிப்பதை பார்க்கும்போது எனக்கு வருத்மாக உள்ளது" என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in