பொய்யான செய்திகளை நம்பாதீர்கள்: 'திருச்சிற்றம்பலம்' பட இயக்குநர் திடீர் ட்விட்

இயக்குநர் மித்ரன் ஜவஹர்
இயக்குநர் மித்ரன் ஜவஹர்

தன்னைப் பற்றி வரக்கூடிய தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என இயக்குநர் மித்ரன் ஜவஹர் தெரிவித்துள்ளார்.

‘யாரடி நீ மோகினி’ படம் மூலமாக தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் மித்ரன் ஜவஹர். இதன் பிறகு, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’, ‘மதில்’ ஆகிய படங்களை இயக்கினார். பின்பு சின்னத்திரையில் ‘திருமணம்’ என்ற தொடரையும் இயக்கினார்.

கடந்த ஆண்டு தனுஷ், நித்யா மேனன் உள்ளிட்டப் பலரது நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் கமர்ஷியல் ரீதியாக பெரும் வெற்றிப் பெற்றது. இதற்கடுத்து இவருடைய அடுத்த படம் குறித்தான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது.

இதுதொடர்பாக பல செய்திகளும் வந்து கொண்டிருக்கும் நிலையில், இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘’ 'திருச்சிற்றம்பலம்’ படத்திற்குப் பிறகு அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இருக்கிறேன். வேறு எந்த படமும் பண்ணவில்லை. என் பெயரில் வெளியில் இருந்து வரும் பொய்யான செய்திகளையோ, விளம்பரங்களையோ யாரும் நம்ப வேண்டாம். விரைவில் அடுத்த படத்திற்கான செய்தியை என் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவேன்" என தெளிவுப்படுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in