வடா பாவ் பெண்ணை சந்தித்த டோலி சாய்வாலா! ட்ரோல் செய்வதை நிறுத்த வேண்டுகோள்!

சந்திரிகா கெரா தீட்சித்- சுனில் பட்டி(டோலி சாய்வாலா)
சந்திரிகா கெரா தீட்சித்- சுனில் பட்டி(டோலி சாய்வாலா)

டெல்லியைச் சேர்ந்தவர் சந்திரிகா கெரா தீட்சித். வடா பாவ் விற்கும் இவர் சமூகவலைதளங்களில் வெகு பிரபலம். சமீபத்தில் தனது கடையில் வடா பாவ் வாங்க வந்த ஒருவரிடம் இவர் மிகவும் கடுமையாக நடந்து கொண்ட காரணத்தால் நெட்டிசன்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டார்.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் சந்திரிகாவின் இந்த கோபமான பேச்சும், உடல்மொழியில் அவர் மீது அதிக அளவிலான நெகட்டிவிட்டி பரவ காரணமாக அமைந்தது. இந்த நெகட்டிவிட்டியை போக்கும் விதமாக இன்னொரு சமூகவலைதளப் பிரபலமான நாக்பூர் டீ வியாபாரி சுனில் பட்டியை (டோலி சாய்வாலா) சந்தித்து பேசியிருக்கிறார்.

அவர் சந்திரகாவை சந்தித்து பேசும் இந்த வீடியோவைப் பகிர்ந்து, ‘வைரலான வடா பாவ் அக்காவை சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சி. அவர் கடுமையான உழைப்பாளி. அவர் மீது நெகட்டிவிட்டியை பரப்பாதீர்கள். அவரை கேலியும் செய்யாதீர்கள். உங்கள் எதிர்காலத்திற்கு வாழ்த்துகள் அக்கா!’ என கேப்ஷனில் கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் சந்திரிகா பேசியிருப்பதாவது, “நாங்கள் தெருவில் நின்று கொண்டு வியாபாரம் செய்கிறோம். எங்களைப் பொறுத்தவரை, எந்த பணியும் மிகவும் சிறியது கிடையாது. சுனில் எப்போதுமே எனக்கு வழிகாட்டி. என்னைப் போலவே அவரும் பல வலிகளை அனுபவித்தார். அவர் என்னைச் சந்திக்க விரும்புகிறார் என்பதை அறிந்ததும், நான் விரைந்து சென்றேன்” என்றார்.

பில்கேட்ஸ் இந்தியா வந்தபோது, சுனில் கடையில் டீ வாங்கிக் குடித்தார். அந்த வீடியோவை தனது சமூகவலைதளப் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். இதனால், சுனில் பட்டி இணையத்தில் வைரலானார். அதேபோல, சந்திரிகாவும் டெல்லியில் சிறந்த வடா பாவ் விற்பனையாளராக சமூகவலைதளங்களில் பிரபலமானார்.

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in