பாலியல் தொல்லை: பிரபல நடிகைக்கு 8 வருடம் சிறை!

பாலியல் தொல்லை: பிரபல நடிகைக்கு 8 வருடம் சிறை!
நடிகை ஜாரா பைதியன்

சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக, பிரபல நடிகைக்கு 8 வருடமும் அவர் கணவருக்கு 14 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகை ஜாரா பைதியன் (37). இவர் 2016-ம் ஆண்டு வெளியான மார்வெல் படமான ’டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவரும் இவர் கணவர் தற்காப்புக் கலை பயிற்றுநர் விக்டர் மார்கேவும் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

நடிகை ஜாரா பைதியன், விக்டர் மார்கே
நடிகை ஜாரா பைதியன், விக்டர் மார்கே

பயிற்சிக்காக வந்த சிறுமியை மது குடிக்க வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் வெளியில் யாரிடம் சொல்லக் கூடாது என்று மிரட்டியதாகவும் மனரீதியாக சித்ரவதை செய்ததாகவும் அந்தச் சிறுமி குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கு கடந்த சில வருடங்களாக நடந்து வந்த நிலையில், இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் நடிகை ஜாரா பைதியனுக்கு 8 ஆண்டு சிறை தண்டனையும் அவர் கணவருக்கு 14 வருடத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in