நயன்தாராவுக்கு எதிராக மருத்துவர் மோசமான பதிவு: கொந்தளித்த பாடகி சின்மயி

நயன்தாராவுக்கு எதிராக மருத்துவர் மோசமான பதிவு: கொந்தளித்த பாடகி சின்மயி

நடிகை நயன்தாராவுக்கு எதிராக மோசமாக கருத்து தெரிவித்த மருத்துவரை விளாசியுள்ளார் பாடகி சின்மயி.

நடிகை நயன்தாராவை மருத்துவர் ஒருவர் சமூகவலைதளத்தில் கிண்டலடித்து பதிவிட்டுள்ளதை பார்த்த பாடகி சின்மயி, அந்த நபரை கடுமையாக சாடி உள்ளார். அந்த மருத்துவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நயன்தாரா குறித்து பதிவிட்டுள்ள கமென்ட்டில், "நயன்தாராவின் நடிப்பு திறமைக்கு மதிப்பு தருகிறேன். ஆனால் பாட்டி வயசுல (40 வயது) குடும்பம், குழந்தை என அவரின் இந்த முடிவை நினைக்கும்போது சிரிப்பு வருகிறது. அவருக்கு கருத்தரிப்பு மையங்கள் உதவி செய்யும்னு நம்புகிறேன்" என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

அந்த மருத்துவரின் கமென்ட்டை பார்த்து கொந்தளித்த பாடகி சின்மயி, "மருத்துவக் கல்லூரிகளில் பாலினப் பாகுபாடு மற்றும் பெண் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் எதிர்கொள்ளும் பாலினச் சார்பு குறித்து எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது இது கிடைத்தது. சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை குறித்து இந்த அற்புதமான மருத்துவர் பதிவிட்ட மோசமான கருத்து” என குறிப்பிட்டு அந்த மருத்துவர் பதிவிட்ட கமென்ட்டின் ஸ்கிரீன் ஷாட்டையும் ஷேர் செய்துள்ளார் சின்மயி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in