நடிகர் சூர்யாவிற்கு இயக்குநர் வெற்றி மாறன் தரப்போகும் பிறந்த நாள் பரிசு என்ன தெரியுமா?

நடிகர் சூர்யாவிற்கு இயக்குநர் வெற்றி மாறன் தரப்போகும் பிறந்த நாள் பரிசு என்ன தெரியுமா?

எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படம் 'வாடிவாசல்'. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் இயக்குநர் அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஜல்லிக்கட்டு காளைக்கும், மனிதனுக்கும் இடையே உள்ள அழுத்தான உறவைப் பற்றி பேசும் இப்படத்தில் மதுரை அலங்காநல்லூரியில் உள்ள நிஜ மாடுபிடி வீரர்கள் பலரும் நடித்துள்ளனர். ஆர்.வேல்ராஜ் மற்றும் ஜாக்கி ஆகியோர் ஒளிப்பதிவு செய்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

'வாடிவாசல்' படத்திற்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக சூர்யா இரண்டு காளைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஈசிஆர் ரோட்டில் எடுக்கப்பட்ட டெஸ்ட் ஷூட் சிறப்பாக வந்திருப்பதால் அதனை சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக வெளியிட வெற்றிமாறன் திட்டமிட்டிருக்கிறார். சூர்யாவின் பிறந்தநாள் வருகிற 23-ம் தேதி வருகிறது. அன்றைய தினம் இந்த டெஸ்ட் ஷூட்டின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in