ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகிறது பிரபல நடிகை தயாரித்த படம்!

ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகிறது பிரபல நடிகை தயாரித்த படம்!

பிரபல நடிகை தயாரித்து நடித்துள்ள படம் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாக இருக்கிறது.

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் நடிகை அமலா பால். அவருக்கு கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லை. மலையாளத்தில் பிருத்விராஜின் ’ஆடுஜீவிதம்’ என்ற படத்தில் மட்டுமே அவர் நடித்துள்ளார். மற்ற மொழிகளிலும் வாய்ப்பு இல்லை.

இந்நிலையில், 'அமலா பால் புரொடக்சன்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அவர் படம் தயாரிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனம் 'கடாவர்' என்ற படத்தைத் தயாரித்துள்ளது. இதில் அமலா பால் நாயகியாக நடித்துள்ளார். ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன், பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அனு பணிக்கர் இயக்கியுள்ளார்.

கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடிக்கிறார். இந்தப் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட இருக்கிறது. இதுபற்றி ஹாட்ஸ்டார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in