ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது சிபி சத்யராஜ் நடித்த `வட்டம்’

ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது சிபி சத்யராஜ் நடித்த `வட்டம்’

சிபி சத்யராஜ், ஆண்ட்ரியா நடித்துள்ள `வட்டம்' படம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகிறது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு , எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், சிபிராஜ் நடித்துள்ள படம், ‘வட்டம்’. ஆண்ட்ரியா, அதுல்யா ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். த்ரில்லர் படமான இதை ‘மதுபானக்கூடம்’ கமலக்கண்ணன் இயக்கி இருக்கிறார். இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக இருக்கிறது.

படம் பற்றி நடிகர் சிபிராஜ் கூறும்போது, “வட்டம் என் கேரியரில் முக்கியமான படம். எளிய இளைஞனாக நடிப்பதில் இருந்து மாறி, சாதாரண மனிதனாக நடிக்க வேண்டும் என்ற எனது ஆசையை ’வட்டம்’ பூர்த்தி செய்திருக்கிறது.

பெரிய லட்சியங்கள் ஏதுமில்லாமல் வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்து வாழும் மனிதனாக இதில் நடித்திருக்கிறேன். நான் இதில் கதாநாயகன் என்றாலும், மற்ற கதாப்பாத்திரங்களுக்கு, குறிப்பாக ஆண்ட்ரியா மற்றும் அதுல்யா ரவி நடித்த கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் உள்ளது. இந்தப்படம் புதுமையான அனுபவத்தைத் தரும்'' என்கிறார்.

இயக்குநர் கமலகண்ணன் கூறும்போது, ``ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாத பலர், மற்றவர்களுடைய வாழ்க்கையின் உள்ளே 24 நேரத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும் அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும்தான் இதன் திரைக்கதை’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in