பிரபல இயக்குநர் பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்கு!

பிரபல இயக்குநர் பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்கு!

சமூக வலைதளத்தில் தனது பெயரில் மர்மநபர்கள் போலியாக கணக்குத் தொடங்கியிருப்பதாக இயக்குநர் ஏ.எல்.விஜய் தெரிவித்துள்ளார்.

அஜித் நடித்த ’கிரீடம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். தொடர்ந்து' மதராசப்பட்டினம்', 'தெய்வத்திருமகள்', 'தாண்டவம்', 'தலைவா', 'வனமகன்' உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து ’தலைவி’ படத்தை இயக்கி இருந்தார். இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்திருந்தார்.

இந்நிலையில், இவர் பெயரில் சமூக வலைதளப் பக்கத்தில் மர்ம நபர்கள் போலியாக கணக்குத் தொடங்கியுள்ளனர். அதில் சினிமா பிரபலங்கள் சிலர் இணைந்துள்ளனர். இதையடுத்து இயக்குநர் ஏ.எல்.விஜய் விளக்கம் அளித்துள்ளார்." தான், எந்த சமூக வலைதளப் பக்கத்திலும் இல்லை என்றும் தயவு செய்து அந்த போலி கணக்குகளை புறக்கணியுங்கள்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா பிரபலங்கள் பெயரில், போலி கணக்குத் தொடங்கி, மோசடியில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in