
அனிருத் ரஜினியின் மகன் போல என இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியுள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘ஜெயிலர்’. அடுத்த மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரத்தமாரே’ என்ற பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். மேடையில் அவர் பேசும் போது, “வாழ்க்கையில் நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் சில தருணங்களுக்காக தான் காத்திருப்போம். அப்படியான தருணம் தான் இது.
ஜூன் 28 என் அப்பா இறந்தநாள். போன வருடம் இதே நாளில் செஸ் ஒலிம்பியாட் தொடங்கியது. அப்போது தலைவருடன் இருந்தேன். இந்த வருடமும் இங்கு இருக்கிறேன். என் அப்பாவே என்னுடன் இருப்பது போல உள்ளது’ என எமோஷனலாக பேசினார்.
மேலும், ‘தலைவருக்கு என இசையமைக்கும் போது அனிருத் இன்னும் உற்சாகமாகி விடுகிறார். ஒருவேளை உங்களுக்கு ஒரு மகன் இருந்தால் அது அனிருத் தான்’ எனவும் பேசி இருக்கிறார் விக்னேஷ் சிவன்.