க்யூட்... விக்கி- நயன் குழந்தைகளின் முதல் பிறந்தநாள் வீடியோ!

விக்கி-நயன்தாரா மகன்களின் பிறந்த நாள் விழா...
விக்கி-நயன்தாரா மகன்களின் பிறந்த நாள் விழா...

நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் மகன்களின் முதல் பிறந்தநாள் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் மகன்கள் உயிர், உலக் இருவரின் முதல் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி தங்களது மகன்களின் முகத்தை காட்டியது மட்டுமல்லாமல், இருவரின் கியூட்டான புகைப்படங்களையும் நயன்தாரா, விக்கி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். ’எங்கள் குழந்தைகளின் கனவு பிறந்தநாள் இது’ எனக் குறிப்பிட்டு இருந்தார் விக்னேஷ் சிவன்.

விதவிதமான கேக், டோனட்ஸ், பொம்மைகள் என க்யூட்டான பல விஷயங்களை வைத்து அந்தப் பிறந்தநாள் நிகழ்வையே க்யூட்டாக மாற்றி இருந்தனர். அந்த பிறந்தநாள் விழாவுக்கு எப்படித் தயாராகி இருந்தார்கள் என்பதை வீடியோவாக தற்போது பகிர்ந்துள்ளனர். உயிர்-உலக் இருவருக்கும் ரசிகர்களும் திரையுலகினரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in