‘எங்களின் மிகப் பெரிய பலம்’ மாமியாருக்கு உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்ன விக்னேஷ் சிவன்!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன்...
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன்...

இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் அம்மாவுக்கு உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாராவின் அம்மா ஓமணக்குரியனின் பிறந்தநாளுக்கு, இயக்குநர் விக்னேஷ் சிவன் உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நயன்தாராவுடன் அவர் இருக்கும் சில புகைப்படங்களையும் ஓணம் கொண்டாட்டத்தின் போது எடுத்தப் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் ஓமணக்குரியன் அத்தமா. உங்கள் மீது எங்களுக்கு அதிக அன்புண்டு. நீங்கள் எங்களின் மிகப்பெரிய பலம்.

நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க எங்களது வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும். நான், நயன், உயிர் & உலக் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என கூறியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in