நீ இப்போதெல்லாம் அதிகம் மேக்கப் போடுவதில்லை: நயன்தாராவின் பிறந்த நாளுக்கு நெகிழ்ச்சியூட்டும் ட்விட் வெளியிட்ட விக்னேஷ் சிவன்

நீ இப்போதெல்லாம் அதிகம் மேக்கப் போடுவதில்லை: நயன்தாராவின் பிறந்த நாளுக்கு நெகிழ்ச்சியூட்டும் ட்விட் வெளியிட்ட விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்களும், திரையுலகைச் சேர்ந்தவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாது, அவரின் ‘கனெக்ட்’ படத்தின் டீசர் மற்றும் அவரது அடுத்த படம் குறித்தான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதனை விக்னேஷ்சிவனின் ‘ரெளடி பிக்சர்ஸ்’ தயாரிக்க ‘எதிர்நீச்சல்’ படப்புகழ் துரை செந்தில்குமார் இயக்க இருக்கிறார்.

நயன்தாரா பிறந்தநாளில் அவருடனான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து விக்னேஷ்சிவன் கூறியிருப்பதாவது: உன்னுடன் இது எனக்கு 9-வது பிறந்தநாள். ஒவ்வொரு பிறந்தநாளும் உன்னுடன் வித்தியாசமானதாகவும், ஸ்பெஷலானதாகவும் மறக்க முடியாததாகவும் இருக்கிறது. ஆனால், மற்ற எல்லாவற்றையும் விட இது நமக்கு கணவன், மனைவியாக ஸ்பெஷலானது. அப்பா அம்மாவாகவும் நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். உன்னை வலிமையான, எந்தவொரு விஷயத்தையும் அர்ப்பணிப்புடன் முடிப்பவளாகவே பார்த்திருக்கிறேன்.

ஆனால், இன்று உன்னை நான் அம்மாவாக பார்க்கிறேன். இது மிகவும் மகிழ்ச்சியான முழுமையான தருணமாக அமைந்திருக்கிறது. நீ இன்னும் மகிழ்ச்சியாக நம்பிக்கையாக அழகாக இருக்கிறார். நீ இப்போதெல்லாம் அதிகம் மேக்கப் போடுவதில்லை.

ஏனெனில் குழந்தைகள் உன்னை முத்தமிடுகிறார்கள். இந்த புன்னகையும் மகிழ்ச்சியும் எப்போதும் உன் முகத்தில் இருக்க நான் பிரார்த்திக்கிறேன். வாழ்க்கை அழகானது. நான் இதற்கு நன்றியுடன் இருக்கிறேன். லவ் யூ! நீதான் என் உயிர் உலகம்! மை லேடி சூப்பர் ஸ்டார் என நெகிழ்ச்சியுடனும் அன்புடனும் இந்தப் பதிவை பகிர்ந்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in