தெரியாமல் செய்து விட்டேன்... விஜய் ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட இயக்குநர் விக்னேஷ் சிவன்!

இயக்குநர் விக்னேஷ்சிவன்
இயக்குநர் விக்னேஷ்சிவன்

கவனக்குறைவால் தவறு செய்துவிட்டேன் என இயக்குநர் விக்னேஷ்சிவன் விஜய் ரசிகர்களிடம் ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

'லியோ’ படப்பின் போது நடிகர் விஜய்க்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும் இதனால் பாதி படத்தை இயக்குநர் ரத்னகுமார் இயக்கியதாகவும் முன்பு செய்திகள் வெளியானது.

ஆனால், இந்த செய்திகளில் சிறிது கூட உண்மையில்லை. சொல்லப்போனால், இந்த செய்திகளைப் பார்த்து நானும் விஜய் சாரும் சிரித்துக் கொண்டிருந்தோம் என சமீபத்திய பேட்டிகளில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெளிவுப்படுத்தியிருந்தார்.

ஆனால், ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கும், லோகேஷ் கனகராஜுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது போல சித்தரிக்கப்பட்ட போஸ்ட்டை பகிர்ந்திருந்தனர். அந்த பதிவை இயக்குநர் விக்னேஷ் சிவன் லைக்ஸ் செய்து பின்னர் நீக்கியுள்ளார். இதனை ஸ்கீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்த அந்த ரசிகர் இதற்கான காரணத்தைக் கேட்டார். இதனால்தான் அஜித் படத்தில் இருந்து உங்களை நீக்கினார்கள் என இன்னொரு பக்கம், இயக்குநர் விக்னேஷ் சிவனைத் திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

இதற்குதான் தற்போது விக்னேஷ்சிவன் மன்னிப்புக் கேட்டு விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர்(எக்ஸ்) பக்கத்தில்," லோகேஷ் கனகராஜ் போட்டோவை பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடித்த இயக்குநர் என்பதால் லைக் போட்டு விட்டேன். அந்த வீடியோவை நான் பார்க்கவே இல்லை. ஆனால், அதன் பின்னர் தான் இப்படியொரு பஞ்சாயத்து என்னுடைய லைக் வைத்து ஓடிக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டேன். எந்தவொரு உள்நோக்கத்துடனும் இதனை நான் செய்யவில்லை. நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் தீவிர ரசிகன் நான்.

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களே, என்னை மன்னித்து விடுங்கள். நான் அந்த வீடியோவில் உள்ள கன்டென்ட்டை பார்க்காமல் வெறுமனே லைக் போட்டது தான் பெரிய தப்பாகி விட்டது. அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். இது நான் தெரியாமல் செய்த பிழை. உங்களைப் போலவே நானும் வெற்றிப்படமான ‘லியோ’வுக்குக் காத்திருக்கிறேன்’ எனக் கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in