
இயக்குநர் மிஷ்கின் நடிகர் விஜய் பட பின்னணி இசைக்கு உதவியதாக மேடையில் இயக்குநர் வெற்றிமாறன் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்ட இயக்குநர் மிஷ்கின் தன் தம்பி இயக்கி இருக்கும் ‘டெவில்’ படத்தின் மூலமாக இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது, “மிஷ்கின் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.
அவரோட பெரும்பாலான திரைப்படங்கள், மனிதர்களின் ஆழ்மனத்திற்குள் ஆழ்ந்து சென்று அதில் ஒளியை தேடுவதற்கான பயணமாகத் தான் இருக்கும். அதைப் போலத் தான் அவரின் இசையும் இருக்கிறது. மிஷ்கின் பாடல்கள் பாடி அவை எந்த அளவிற்கு வைரல் ஆகியிருக்கிறது என்பதை நாம் அனைவருமே பார்த்து இருக்கிறோம். அது போல் அவருக்கு இசை மீது இருக்கும் ஆர்வமும் எல்லோரும் அறிந்ததே. வின்சென்ட் செல்வா கூறியது போல் விஜயின் யூத் படத்தின் பின்னணி இசையில் கூட அவர் உதவி புரிந்திருக்கிறார்.
இவ்வளவு காலத்திற்குப் பிறகு இசையை முழுமையாகக் கற்றுக் கொண்டு அதை நம் அனைவர் முன்னால் மேடையில் அரங்கேற்றுவதற்கு ஒரு தைரியம் தேவை. இதனால் தான் அவர் இதை சாதித்து இருக்கிறார்” என்று கூறினார்.