சூர்யாவின் `வாடிவாசல்’ பற்றி அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

சூர்யாவின் `வாடிவாசல்’ பற்றி அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

வெற்றிமாறன் - சூர்யா இணைந்திருக்கும் ‘வாடிவாசல்’ படம் குறித்தானத் தகவலை பகிர்ந்திருக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் திரைப்படம் ‘வாடிவாசல்’. சூர்யா மற்றும் வெற்றிமாறன் முதன் முறையாக இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகம் நிலவுகிறது. வெற்றிமாறன் தற்போது ’விடுதலை’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் நடிகர் சூர்யா, இயக்குநர் ‘சிறுத்த’ சிவாவுடனான படத்தில் பிஸி. இதனால், ‘வாடிவாசல்’ படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை வாடிவாசலில் சூர்யா காளைகளை அடக்குவது போன்ற இதன் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடந்தது.

இயக்குநர் வெற்றிமாறன் அவரது தயாரிப்பில் ஓடிடியில் வெப்சீரிஸாக வெளியாகியுள்ள ‘பேட்டைக்காளி’ குறித்து யூடியூப் தளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் ‘வாடிவாசல்’ படம் குறித்து பகிர்ந்துள்ளார். ’’பேட்டைக்காளி’ இணையத் தொடருக்கும் ‘வாடிவாசல்’ கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ‘பேட்டைக்காளி’ கதை சமகாலத்தில் நடக்கும் கதையாக இருக்கும். ஆனால், ‘வாடிவாசல்’ கதைக்களத்தை நான் 1960களில் நடக்கும் கதையாக எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் நடந்திருக்கும் முக்கிய அரசியல் காலக்கட்டத்தில் கதையை அமைக்க வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார்.

வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படம் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இரண்டு பாகங்களாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் டிசம்பரில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம். ‘விடுதலை’ வெளியான பிறகு டிசம்பர் அல்லது அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து ‘வாடிவாசல்’ படப்பிடிப்புத் தொடங்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in