தகாத வார்த்தையில் பேசித்தான் அப்டேட் வேண்டுமா?: ரசிகருக்கு விஜய் பட இயக்குநர் கொடுத்த பதிலடி!

இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் விஜய்.
இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் விஜய்.

’GOAT' படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர் ஒருவர் தகாத வார்த்தையில் திட்டியிருக்க அதற்கு வெங்கட்பிரபு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த ட்வீட் தற்போது வைரல் ஆகியிருக்கிறது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். படத்தின் அப்டேட், ஷூட்டிங் ஸ்பாட் சுவாரஸ்யங்கள் எனப் பலவற்றைத் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். இந்த இணைய உலகில் இது ரசிகர்கள் சண்டையாகவும் பல நேரங்களில் உருவெடுத்து விடுகிறது. அப்படித்தான் இயக்குநர் வெங்கட்பிரபுவை ரசிகர் ஒருவர் அப்டேட்டுக்காக அத்துமீறி பேசியிருக்கிறார்.

நடிகர் விஜயின் ’GOAT' படம் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பின்னர் இந்தப் படமும் ‘தளபதி 69’ படத்தோடு சினிமா பயணத்தை விட்டுவிட்டு முழுநேரம் அரசியலுக்குத் திரும்ப போகிறேன் என்று விஜய் கூறியுள்ளார். இதனால், இந்தப் படத்தின் அப்டேட் குறித்து தினமும் இணையத்தில் ரசிகர்கள் கேட்ட வண்ணம் உள்ளனர். அப்படித்தான், இந்தப் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபுவை டேக் செய்து ரசிகர் ஒருவர், தகாத வார்த்தையில் திட்டி ’அப்டேட் சொல்கிறேன் என்று சொல்லி ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது. எப்போது அப்டேட் வரும்?’ என கேட்டிருக்கிறார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இயக்குநர் வெங்கட்பிரபு, ‘நான் சொல்ல வேண்டும் என்றுதான் காத்திருந்தேன். ஆனால், இதுக்கு மேல் எப்படி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’ எனக் கூறியிருக்கிறார். இப்படித் தகாத வார்த்தையில் தேவையில்லாமல் பேசிதான் அப்டேட் உங்களுக்கு வேண்டுமா என வெங்கட்பிரபு கேட்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாகவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் விஜயுடன் நடிகர்கள் பிரபுதேவா, பிரஷாந்த், லைலா, சிநேகா என பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த வருடத்திற்குள் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in