HBD Venkatprabhu | ’சென்னை-28’ படத்திற்கும் அமீர்கானுக்கும் என்ன கனெக்‌ஷன் தெரியுமா?

வெங்கட்பிரபு...
வெங்கட்பிரபு...

தமிழ் சினிமாவின் ’கேப்டன் கூல்’ இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கு 47வது பிறந்தநாள் இன்று. 'சென்னை 28’ல் களமிறங்கி மங்காத்தா விளையாடுபவர் குறித்தான சில சுவாரஸ்ய தகவல்களை இங்குப் பார்க்கலாம்.

சிறுவயதில் கங்கை அமரனுடன் வெங்கட்பிரபு, பிரேம்ஜி...
சிறுவயதில் கங்கை அமரனுடன் வெங்கட்பிரபு, பிரேம்ஜி...

* இளையராஜா, கங்கை அமரன் என இருபெரும் இசை ஜாம்பவான்கள் இருக்கும் இசைக்குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் வெங்கட்பிரபுவுக்கு நடிப்பு, இயக்கம் மீதுதான் தீராத ஆர்வம் இருந்தது. லண்டனில் படித்து முடித்து சென்னை திரும்பியவர் பாட்டு, நடிப்பு என வலம் வந்தார். பின்பு, இயக்குநராக இவர் அடியெடுத்து வைத்த ‘சென்னை 600028’ திரைப்படம் இவருக்கு பெரும் புகழைத் தேடித் தந்ததுடன் ரசிகர்களிடையேயும் பெரியளவில் வரவேற்பைப் பெற்று தந்தது.

* சென்னையின் மிடில் கிளாஸ் இளைஞர்களும் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டும் என்ற எளிய ஒன்லைனை கலகலப்பாக புது டிரெண்ட் செட் செய்து ’சென்னை-28’ படத்தில் கொடுத்திருப்பார் வெங்கட்பிரபு. இந்தப் படம் வெளியான சமயத்தில் இயக்குநர்கள் பாரதிராஜாவும், பாலச்சந்தரும் அந்தப் படத்தைப் பாராட்டி வெங்கட்பிரபுவுக்கு கொடுத்த கடிதங்களை தன் வாழ்நாள் பொக்கிஷம் என்பார்.

வெங்கட்பிரபுவின் ‘சென்னை 28’ கேங்க்...
வெங்கட்பிரபுவின் ‘சென்னை 28’ கேங்க்...

* குறிப்பாக அந்தக் கடிதத்தில் இயக்குநர் பாலச்சந்தர் ‘சென்னை-28’ படத்தை ஆஸ்கருக்குத் தேர்வான அமீர் கானின் ’லகான்’ படத்தின் முயற்சியோடு ஒப்பிட்டு பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

* ’மங்காத்தா’ படம் அஜித்துக்கும், வெங்கட்பிரபுவுக்கும் முக்கியமானதாக அமைந்தது. நீண்டநாள் கழித்து எதிர்கதாநாயகனாக வில்லத்தனம் காட்டி நடிப்பில் அசத்தி இருப்பார் அஜித். இப்போதுவரை வெங்கட்பிரபுவை துரத்தும் கேள்வி ‘மங்காத்தா2’ எப்போது என்பதுதான். அதேபோல, ‘கோவா’ படத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களின் காதலை இயல்பாக காட்சிப்படுத்தியதில் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.

வெங்கட்பிரபு, எஸ்.பி.பி...
வெங்கட்பிரபு, எஸ்.பி.பி...

இவரும் பாடகர் எஸ்.பி.பி.யின் மகனுமான எஸ்.பி. சரணும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். எஸ்.பி.பி. மீது வெங்கட்பிரபுவுக்கு அளவு கடந்த அன்பும் மரியாதையும் உண்டு. எஸ்.பி.பி. மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இறந்த போது பொதுவெளியில் குடும்ப உறுப்பினராக முதலில் அறிவித்தவர் வெங்கட்பிரபு தான்.

’தளபதி 68’
’தளபதி 68’

* 'மங்காத்தா- வெங்கட்பிரபு கேம்’, ‘மாநாடு- வெங்கட்பிரபு பாலிடிக்ஸ்’, ‘கஸ்டடி- வெங்கட்பிரபு ஹண்ட்’ என படத்தின் கதையை ஒரு வரியில் தலைப்பின் கீழே டேக்காக பயன்படுத்துவதை தன் படங்களில் வழக்கமாக பின்பற்றி வருகிறார் வெங்கட்பிரபு.

* பிரேம்ஜி, ஜெய், நிதின் சத்யா, வசந்த், சிவா, வைபவ் என தனக்கென ஒரு நடிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. பெரும்பாலும் இவர்களுக்கு தனது படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் கொடுத்து கலகலப்பாக்கி விடுவார். அதேபோல, இவரது படத்திற்கு இசை இவரது தம்பி யுவன் தான். விஜயுடன் முதல்முறையாக இயக்குநராக ‘தளபதி 68’ படத்தில் இணைந்திருக்கும் இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in