ஒரே நாளில் நடக்கும் கதையாக உருவாகிறது `டி 3’

பிரஜின்
பிரஜின்

``ஒரே நாளில் நடக்கும் கதையை கொண்ட படமாக ’டி 3’ உருவாகிறது'' என்று அதன் இயக்குநர் தெரிவித்தார்.

பீமாஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் மனோஜ் மற்றும் ஜேகேஎம் புரொடக்சன்ஸ் சார்பில் சாமுவேல் காட்சன் இணைந்து தயாரித்துள்ள படம், ’D 3’.

அறிமுக இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள இதில் பிரஜின் கதாநாயகனாக நடிக்கிறார். வித்யா பிரதீப் நாயகியாக நடிக்க, சார்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் டைட்டில் லுக்கை இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிட்டார்.

ஒரேநாளில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகும் படம் இது. பெரும்பாலான படப்பிடிப்பை குற்றாலத்தில் நடத்தியுள்ளனர். இயக்குநர் பாலாஜி, படம் பற்றி கூறும்போது, “நான் கேள்விப்பட்ட ஒரு உண்மை விஷயத்தை வைத்து இந்தக் கதையை உருவாக்கியுள்ளேன். குற்றாலத்தில் மழை சீசன் இல்லாத நேரத்தில் தான் படப்பிடிப்பை நடத்த தொடங்கினோம். ஆனால் படப்பிடிப்பு நடந்த எழுபது சதவீத நாட்களில் மழையின் குறுக்கீட்டுடன் தான் நடத்த வேண்டி இருந்தது. 60 சதவீத படப்படிப்பு முடிவடைந்த நிலையில் முக்கியமான கேரக்டரில் நடித்தவர், கரோனாவால் உயிரிழந்தார். அதனால் அவருக்கு பதிலாக வேறு நடிகரை வைத்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தினோம்.

அதேபோல சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் படப்பிடிப்பு நடத்த தயார் நிலையில் இருந்தோம். ஆனால் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த நடிகர் வர்கீஸ் மேத்யூவுக்கு விமான நிலையத்தில், கோவிட் பாசிடிவ் என ரிசல்ட் வர, படப்பிடிப்பு கேன்சல் ஆனது. இப்படி நிறைய அனுபவங்களை கடந்து இந்தப்படம் உருவாகியுள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in