வெங்கட்பிரபு வெளியிட்ட சுனைனா பட பர்ஸ்ட் லுக்!

வெங்கட்பிரபு வெளியிட்ட சுனைனா பட பர்ஸ்ட் லுக்!

சுனைனா நடிக்கும் த்ரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்.

சுனைனா நடிக்கும் திரில்லர் படம் 'ரெஜினா'. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. எல்லோ பியர் புரொடக்‌ஷன் சார்பில் சதீஷ் நாயர் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார், மலையாள இயக்குநர் டோமின் டி சில்வா. இவர், மலையாளத்தில் "பைப்பின் சுவத்திலே பிராணயம்", "ஸ்டார்" படங்களை இயக்கியவர்.

’ரெஜினா’ ஸ்டைலிஷ் திரில்லர் படமாக இருக்கும். சாதாரண இல்லத்தரசியாக இருக்கும் ஒரு பெண், அசாதாரணமான விஷயங்களைச் சாதிப்பதைப் பற்றிய கதையை கொண்டது. அனைவரையும் ஈர்க்கக்கூடிய படமாக இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெங்கட் பிரபு வெளியிட்டார். மலையாள போஸ்டரை இயக்குநர் ஆஷிக் அபு வெளியிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in