தெலுங்கில் கால் பதிக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு: நாக சைதன்யாதான் ஹீரோ

தெலுங்கில் கால் பதிக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு: நாக சைதன்யாதான் ஹீரோ

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யா, தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன்ஸ் சார்பில் தயாரிக்கும், புதிய இருமொழி திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

`மன்மதலீலை' படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்குநராக அவதாரம் எடுத்து 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், நாகசைதன்யா உடன் அவர் இணைகிறார். நாகசைதன்யா இந்த வருடத்தில் பங்கார ராஜு என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து, `Thank You' என்ற அவரது அடுத்த படம் வெளியீட்டிற்கு காத்திருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு உடன் இணைகிறார்.

நாகசைதன்யாவின் 22-வது படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரமாண்டமாக உருவாக உள்ளது. இது வெங்கட் பிரபுவின் 11-வது படம், தெலுங்கில் அவருக்கு முதல் படம்.

டோலிவுட்டில் தொடர்ந்து படங்களை எடுத்து வரும் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன்ஸ் தற்போது வெங்கட் பிரபு - நாக சைதன்யா இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஶ்ரீனிவாசா சித்தூரி படத்தினை தயாரிக்க, பவன் குமார் இப்படத்தினை வழங்குகிறார்.

பெயரிடப்படாத இந்த புதிய படம் நாகசைதன்யாவிற்கு முதல் தமிழ் படம் ஆகும். இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம். இப்படம் பெரிய பட்ஜெட்டில் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யாவின் திறமைக்கு தகுந்த படியும், தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ற வகையிலும் இக்கதையை உருவாக்கியுள்ளார். முக்கியமான நடிகர்களும், பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்களும் சேர்ந்து ஒரு கமர்சியல் என்டர்டெயினராக, இப்படம் உருவாக்கப்படவுள்ளது. படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படுகிறது.

Related Stories

No stories found.