விரைவில் திருமுருகனின் அடுத்த சீரியல்... மெட்டி ஒலியா, நாதஸ்வரமா?

'எதிர்நீச்சல்' சீரியல் குழு
'எதிர்நீச்சல்' சீரியல் குழு

'எதிர்நீச்சல்’ சீரியல் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலுக்கு நிகராக ஏற்கெனவே ஹிட் அடித்த சீரியலின் இரண்டாம் பாகத்தை இறக்கத் தயாராகி விட்டது சேனல் தரப்பு.

சன் டிவியில் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் டிஆர்பி-யில் முன்னிலை வகிக்கிறது. இந்த சீரியலுக்கு நிகராக இன்னொரு சீரியலை ஒளிபரப்ப முடிவு செய்திருக்கிறதாம் சேனல் தரப்பு. இதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட்டடித்த சீரியலின் இரண்டாம் பாகம்தான் அது என்கிறார்கள்

எதிர்நீச்சல் தொடர்
எதிர்நீச்சல் தொடர்

’மெட்டி ஒலி’, ‘நாதஸ்வரம்’ போன்ற குடும்பங்கள் கொண்டாடும் ஹிட் சீரியல்களைக் கொடுத்தவர் இயக்குநர் திருமுருகன். குறிப்பாக, ‘நாதஸ்வரம்’ சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். சீரியலில் இருந்து சினிமாவுக்குச் சென்று ‘எம்மகன்’ படத்தையும் அவர் இயக்கினார்.

இப்போது மீண்டும் சின்னத்திரைக்குத் திரும்பியுள்ளார் திருமுருகன். “புது சீரியலுடன் சீக்கிரம் வர இருக்கிறேன்” என்று திருமுருகன் அறிவித்துள்ளார். ஆனால், அது என்ன சீரியல் என்பதை இன்னும் அவர் அறிவிக்கவில்லை.

ஆனால், இது ‘நாதஸ்வரம்’ சீரியலின் இரண்டாம் பாகம்தான் என்று நிறைய ரசிகர்கள் உற்சாகமாகத் தெரிவித்து வருகின்றனர். ஏனெனில், இந்த சீரியலில் நடித்திருந்த நடிகைகள் அண்மையில் யூனியன் செய்திருந்தனர். அதனால், இந்த சீரியலாகத்தான் இருக்கும் எனத் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

சேனல் தரப்பும் இதே முடிவில் இருப்பதாக தெரிகிறது. இன்னொரு பக்கம், ‘மெட்டி ஒலி’ ரசிகர்களோ, ‘மெட்டி ஒலி2’ தான் வேண்டும் என கமென்ட் செய்து வருகின்றனர். விரைவில் இதுகுறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

இதையும் வாசிக்கலாமே...

இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!

தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in