ரூ.500 கோடி வசூல் எல்லாம் பெருமையா? 'ஜெயிலர்’ பட வசூலைக் கலாய்த்த பிரபல இயக்குநர்!

'ஜெயிலர்'  ரஜினிகாந்த்
'ஜெயிலர்' ரஜினிகாந்த்

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர்கள் கெளதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், யோகிபாபு, அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் தங்கர்பச்சான் ‘ஜெயிலர்’ திரைப்படம் குறித்து பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் தங்கர்பச்சான்...
இயக்குநர் தங்கர்பச்சான்...

நிகழ்வில் இயக்குநர் தங்கர்பச்சான் பேசியதாவது, “இது துணிச்சல் மிக்க காரியம். என் எதிரில் ஆயுதங்களுடன் பலர் நிற்கிறார்கள்.. நான் மட்டும் நிராயுத பாணியாக நிற்கிறேன். ஒவ்வொரு படத்திலும் இதை செய்யவேண்டி இருக்கிறது. படத்தை எடுக்க, விற்க, மக்களை படம் பார்க்க வரவழைக்க என மிகுந்த சிரமப்பட வேண்டி இருக்கிறது. மக்களிடம் நல்ல சினிமாவை கொண்டு போவதற்கு பல தடைகள் இங்கே இருக்கின்றன.

எல்லா நடிகர்களும் இரண்டு வருடங்களுக்கு ஒரு நல்ல படத்திலாவது நடிக்க வேண்டும். 500 கோடி வசூல் என்பதில் என்ன பெருமை? நல்ல படங்கள் நிறைய வந்தால் சமூகம் மேலே வரும். பெரிய நடிகர் படம் என்கிற பெயருக்காகவே படம் பார்க்க தயாராக இருக்கிறார்கள். வெட்டு, குத்து காட்சிகளை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்துகிறார்கள். அதுபோன்ற படங்களின் தயாரிப்பாளர்களுக்கு, அதில் நடிக்கும் நடிகர்களுக்கு பொறுப்பு இருக்காதா? நல்ல படம் பாருங்கள் என்று கெஞ்சிக்கிட்டே இருக்கணுமா?" என்றார்.

’கருமேகங்கள் கலைகின்றன’ பட விழாவில்...
’கருமேகங்கள் கலைகின்றன’ பட விழாவில்...

மேலும் அவர் பேசுகையில், “இயற்கை விவசாயம் செய்வதை போல நல்ல படங்களை கொடுத்து வருகிறேன். ஆனால் எங்களுக்கு தண்டனை தான் கொடுத்து வருகிறீர்கள். எம்ஜிஆர் படம் பார்த்து வளர்ந்தவன் நான். அப்போதைய கமர்சியல் படம் என்றாலும் அதில் மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற விஷயங்களுக்கு எதிராக கருத்துக்கள் சொல்லப்பட்டன. ஆனால் இன்று மது விற்பனை தொகையை அறிவிப்பதை போலத்தான் சினிமா பட வசூல் விளம்பரமும் இருக்கிறது. இரண்டுக்கும் வித்தியாசம் என்ன இருக்கிறது ?

'கருமேகங்கள் கலைகின்றன' மனதுக்கு மிக நிறைவான படைப்பாக கொடுத்துள்ளேன். உடலை, மனதை கெடுக்காத படைப்பு இது. உலகத் தமிழர்கள் இந்த படத்தை பார்த்தால் அடுத்த விமானத்தை பிடித்து இங்கே கிளம்பி வந்து விடுவார்கள். அப்படி ஒரு உணர்வுபூர்வமான படம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in