4 தேசிய விருதுகளைப் பெற்ற பிரபல இயக்குநர் கவலைக்கிடம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

4 தேசிய விருதுகளைப் பெற்ற பிரபல இயக்குநர் கவலைக்கிடம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

பிரபல இயக்குநர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரபல வங்காள இயக்குநர் தருண் மஜூம்தார் (92). இவர் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். அதில் 'பலிகா பது', 'குஹேலி', 'ஸ்ரீமர் பிருத்விராஜ்', 'தாதர் கீர்த்தி' ஆகிய குறிப்பிடத்தக்கவை. இவர், சிறந்த இயக்கத்துக்காக, நான்கு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். 1990-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு ’அதிகார்’ என்ற ஆவணப்படத்தை இயக்கி இருந்தார்.

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன், திடீரென உடல் நலம் குன்றியது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். சிறுநீரகம் மற்றும் இருதய நோய் காரணமாக அவருக்கு அங்கு தீவிர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் உடல்நிலை புதன்கிழமை மோசமடைந்தது.

அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் நலம் பெற ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in