சின்மயியிடம் ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்கும் சுசிகணேசன்!

சர்ச்சை பதிவு போட்டதாக தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
இயக்குநர் சுசிகணேசன்
இயக்குநர் சுசிகணேசன்hindu கோப்பு படம்

இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைவது குறித்து சர்ச்சை பதிவு போட்ட பாடகி சின்மயியிடம் ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு இயக்குநர் சுசிகணேசன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் சுசிகணேசன் இயக்கும் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதனிடையே, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சுசிகணேசன் படத்துக்கு இளையராஜா இசை அமைப்பதா என பாடகி சின்மயி, லீலா மணிமேகலை ஆகியோர் சர்ச்சைக்குரிய பதிவு போட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்நிலையில், இளையராஜாவுடன் இணைந்து செயல்படுவது குறித்து சர்ச்சை பதிவு போட்ட பாடகி சின்மயி மற்றும் கவிஞர் லீலா மணிமேகலை ஆகியோருக்கு எதிராக ஒரு கோடியே 10 லட்சம் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் சுசிகணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாடகி சின்மயி
பாடகி சின்மயிhindu கோப்பு படம்

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லீனா மணிமேகலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஏற்கெனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், தன்னை பழிவாங்கும் நோக்கத்துடன் லீனா மணிமேகலையும், சின்மயியும் செயல்படுவதாகவும், இளையராஜாவுடன் இணையவுள்ள நிலையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை தொடர்ச்சியாக இருவரும் பரப்பி வருவதாகவும் சுசிகணேசன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி, மனுதாரர் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகவும், சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சின்மயி, லீனா மணிமேகலை ஆகியோர் வெளியிட இடைக்கால தடை விதித்ததோடு, மனுவிற்கு லீனா மணிமேகலை, சின்மயி, கூகுள், பேஸ்புக், ட்விட்டர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in