7-வது முறையாக இமானுடன் இணைகிறார் சுசீந்திரன்

இசையமைப்பாளர் இமான்
இசையமைப்பாளர் இமான்

இயக்குநர் சுசீந்திரன், ஏழாவது முறையாக இசை அமைப்பாளர் டி.இமானுடன் இணைகிறார்.

இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் இமானுடன் இணைந்து பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் என ஆறு படங்களில் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படங்களின் பாடல்களும் பின்னணி இசையும் வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் இசையமைப்பாளர் இமானின் பிறந்த நாளையொட்டி அவருக்கு நேற்று வாழ்த்து கூறிய இயக்குநர் சுசீந்திரன், தான் ஏழாவது முறையாக இமானுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், பாடல் கம்போசிங் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சுசீந்திரனுடன் இமான்
இயக்குநர் சுசீந்திரனுடன் இமான்

மிகப் பெரிய பட்ஜெட்டில், நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இந்தப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. படப்பிடிப்பு, மே 1 ஆம் தேதி துவக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in