
‘நாய் சேகர் ரிடர்ன்ஸ்’ பட இயக்குநர் சுராஜ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது. பாடல் கம்போசிங்கிற்காக நடிகர் வடிவேலு சுராஜ் உள்ளிட்டோர் லண்டன் சென்றனர். லண்டனில் தங்கி சந்தோஷ் நாராயணன் தலைமையில் கம்போசிங் பணிகள் நடந்தது.
பாடல் பணிகள் முடிந்து சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுக்கு நேற்று கரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது இயக்குநர் சுராஜ்க்கும் கரோனா தொற்று உறுதியானதை அடுத்துப் படக்குழுவினருடன் லண்டன் சென்றவர்கள் அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.