`கலைஞரின் கண்ணம்மா’ இயக்குநர் திடீர் மரணம்

`கலைஞரின் கண்ணம்மா’ இயக்குநர் திடீர் மரணம்
எஸ்.எஸ்.பாபா விக்ரம்

கலைஞர் கதை வசனத்தில், "கலைஞரின் கண்ணம்மா" படத்தை இயக்கிய எஸ்.எஸ்.பாபா விக்ரம் காலமானார். அவருக்கு வயது 82.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கதை, வசனத்தில் மீனா, பிரேம்குமார் நடித்த ’கலைஞரின் கண்ணம்மா’ படத்தை தயாரித்து இயக்கியவர் எஸ்.எஸ்.பாபா விக்ரம். 2005-ம் ஆண்டு வெளிவந்த அந்த படம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

அதைத் தொடர்ந்து கருணாஸ், கோவை சரளா, நாசர், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்த "பொம்மை நாய்கள்" என்ற படத்தை தயாரித்து இயக்கினார். அடுத்து, ’என் இதயராணி’ என்ற படத்தையும் இயக்கினார்.

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த பாபா விக்ரம், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் தனது மனைவி லட்சுமி, மகள் கண்ணம்மா ஆகியோருடன் வசித்து வந்தார். அங்கு அன்ன பாபா ஆலயம் என்ற பெயரில் சாய்பாபாவுக்கு ஆலயம் நிறுவி வழிபாடு செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை மரணம் அடைந்தார். அவர் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.